முட்டை சேர்க்காத ரவா கேக் ரெசிபி
கேக், கூக்கீஸ் போன்ற உணவுகள் சந்தையில் நிறைந்திருக்கின்றன. பார்க்கவே சுவைக்கத் தூண்டும் தோற்றம் அவை. ஆனால் ஆரோக்கியமானதா எனத் தெரியாது. இதுவே நீங்கள் வீட்டில் செய்தால், நிச்சயம் அது ஆரோக்கியம் நிறைந்ததாகவும் சுவையானதாகவும் இருக்கும். முட்டை சேர்க்காத ரவா கேக்கை வீட்டிலே எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம். இந்த கேக்கின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே இந்த கேக்கை நீங்கள் செய்துவிட முடியும்.குழந்தைகளுக்கான ரவா கேக்
தேவையானவை
- ரவா – 1 கப்
- தயிர் – 1 கப்
- பால் – 1 கப்
- பொடித்த சர்க்கரை – 1 கப்
- நெய் – 4 டேபிள்ஸ்பூன்
- பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
- வென்னிலா எசன்ஸ் – சில துளிகள்
- பொடித்த முந்திரி, பாதாம், வால்நட், உலர் திராட்சை – ஒரு கைப்பிடி
- பாதாம் – 1 டேபிள்ஸ்பூன் (அலங்கரிக்க)
செய்முறை
- ஒரு பவுலில் ரவா மற்றும் பொடித்த சர்க்கரை கலந்து கொள்ளவும்.
- மேலும். அதில் தயிர், பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
- கலந்த பின் நெய் ஊற்றிக் கலக்கவும்.

4.இப்போது அதில் பேக்கிங் பவுடர், வென்னிலா எசன்ஸ் சேர்க்கவும்.

5.அனைத்துப் பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
6.இப்போது கலவையில் நட்ஸை சேர்த்துக் கொள்ளலாம். நட்ஸை கலவையோடு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

7.ஒவனில் வைத்திருக்கும் பாத்திரத்தில் நெய்த் தடவி, அதில் கலந்து வைத்த மாவை ஊற்றவும்.

8.மாவை செட் செய்த பின் பாதாமை மேலே தூவவும்.
9.ப்ரீ ஹீட்டில் 180 டிகிரி அளவு வைக்கவும்.
10.ஒவனில் 180 டிகிரி ஹீட்டில் பேக் செய்யவும்.
11.கேக்கின் ஓரத்தில் லைட் பிரவுனாகும் வரை பேக் செய்யவும்.
12.நட்ஸை சேர்க்காமல் செய்தால் இதே கேக்கை ஒரு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும் தரலாம்.
சுவையான கேக் ரெடி.
0 Comment to "சுவையான ரவா கேக் செய்முறை"
Post a Comment