இந்த தகவல் மிகவும் அவசியமானது அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு நானும் என் மனைவி மற்றும் இளைய மகன் மூன்று பேரும் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று இருந்தோம்.

 மருத்துவமனைக்கு செல்லும் முன்பு சிங்காநல்லூரில் உள்ள பிரபல சாந்தி சோஷியல் சர்விஸ் கேண்டினில் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஒரு சிக்னலில் நின்று கொண்டு இருந்தோம்,
அப்பொழுது என் வாகனத்திற்கு முன்பு ஒரு பெண் 3 வயதுள்ள தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டு தன் கணவருடன் சிக்னலில் இரு சக்கர வாகனத்தில் உக்காந்து கொண்டு இருந்தனர்,

 அக்குழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு சிரித்து கொண்டு இருந்ததை ரசித்து கொண்டு இருந்த வேளையில் அந்த குழந்தையின் இரண்டு கால்களில் ஒரு கால்கள் மட்டும் சற்று வித்தியாசமாக இருப்பதை கண்டேன்,,

நான் சற்று முன்னோக்கி சென்று அக்குழந்தையின் கால்களை சற்று உற்று பார்த்த பின் தான் தெரிந்தது அந்த குழந்தைக்கு ஒரு கால் ஊனம் என்று...

உடனே அந்த குழந்தையின் தந்தையிடம் சிக்னல் முடிந்தவுடன் வண்டியை சற்று ஓரமாக நிறுத்துங்கள் உங்கள் குழந்தையை பற்றி சிறிது பேசவேண்டும் என்று கூறியதும் அவரும் வண்டியை சற்று ஓரமாக நிறுத்தினார்..

முதலில் எங்களை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு, பிறகு அவருடைய குழந்தையின் கால்களை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்,,

அந்த பெண் குழந்தை பிறக்கும் போதே ஒரு கால் ஊனமாக தான் பிறந்தது என்றும் கால்களை சரி செய்ய தனியார் மருத்துவமனையில் லட்ச ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர் எங்களால் அவ்வளவு பணம் செலவு செய்யும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்,, சரி இதெல்லாம் ஏன் கேக்கறீங்க என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்...

நான் என் மகனை அவரிடம் காண்பித்து என் மகனின் கால்கள் எப்படி உள்ளது என கேட்க, அவரும் நன்றாக தான் உள்ளது என்று கூறினார்..
பிறகு நான் என் மகனை பற்றிய விவரங்களை அவரிடம் கூற ஆரம்பித்தேன்,,

என் மகனின் பெயர் அர்சத்,, பவானி அரசு மருத்துவமனையில் பிறக்கும் போதே இவனுக்கு இரண்டு கால்களும் ஊனம் உங்கள் மகள் போலவே தான் என் மகனுக்கும் கால்கள் ஊனமாக பிறந்தான்,,

 இதுக்கு கணுக்கால் உள்வளைவு ஊனம்னு (clubfoot) சொல்லுவாங்க,, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து குணமாக்கிவிட்டோம் என்று கூறியதும் அவர் சற்று அதிர்ச்சி அடைந்து இதை எப்படி சரி பண்ணிங்க தெளிவா சொல்லுங்க நானும் என் மகளுக்கு சரி பண்ணனும்னு கேட்க ஆரம்பித்தார்..

மகன் ஊனமாக பிறந்து விட்டானே என்று நானும் உங்களை போல தான் மனவேதனையில் திகைத்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த வேளையில், என் மகன் பிறப்பதற்கு முன்பு ஒரு பதிவை வாட்ஸப் குழுவில் சேர் செய்தது நினைவுக்கு வந்தது,
அந்த பதிவை மீண்டும் தேடி பார்த்த பொழுது அது கணுக்கால் உள்வளைவு ஊனத்திற்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்ற பதிவு,,
நான் பகிர்ந்த பதிவு கடைசியில் எனக்கே தேவைப்பட்டது..

அந்த பதிவில் இருந்த  அலைபேசி  எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசினேன்,, மறுமுனையில் பேசியவர்கள் குழந்தையை தூக்கி கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கூற, நானும் என் மனைவியும், பிறந்து 7 நாள் மட்டுமே ஆன இவனை தூக்கி கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தோம்,,

என் மகனை மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு கால் பாதங்களை வளைத்து மாவுகட்டு போட ஆரம்பித்தார்கள்,,

போடப்பட்ட மாவுகட்டுகளை அடுத்த வாரம் வரைக்கும் வைத்து இருக்கவேண்டும்,, பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் மாவுகட்டுகளை அவிழ்த்து புதிய மாவுகட்டுகளை கட்டுவார்கள்,, இப்படி ஒவ்வொரு மாவுகட்டுகளை கட்டும் பொழுதும் கால் பாதத்தின் மேல் பகுதி எலும்புகளை நேராக வளைத்து கட்டு கட்டுவார்கள்,,

வாரத்திற்கு ஒரு மாவுகட்டு,,

இப்படி 15 வாரம் பவானில இருந்து வந்து கட்டு போட்டு போவோம்,,

அப்புறம் 15 மாவுகட்டு முடிஞ்சதும் குழந்தையோட இரண்டு  குதிங்கால் மேல் பகுதியிலும் அறுவைசிகிச்சை செய்து ஒரு வாரம் மருத்துவமனைல தங்கினோம்,,

அதுக்கு அப்புறம் ஒரு ஷூ கொடுப்பாங்க அதை தினமும் போடுகிட்டே வந்தோம்,, குழந்தைகள் வளர வளர ஷூ வும் இலவசமாவே மாத்தி கொடுதாங்க,,  இப்படி 5 வயசு வரைக்கும் ஷூ போட்டு வந்த கண்டிப்பா குணம் ஆகிடும்,,

நாங்கள் இப்பொழுது 3 வருடங்களாக சிகிச்சைக்கு வந்து கொண்டு இருக்கிறோம் இப்ப கூட நாங்க மருத்துவமனைக்கு செல்ல தான் வந்து இருக்கின்றோம் என்று  சொல்லி முடிச்சதும் அவர் முகத்துல கொஞ்சம் சந்தோசத்துடன் இருந்தார்.. அவர் என் மகளின் கால்களை சரி செய்ய எனக்கு உதவுங்கள் என்று கேட்க நானும் அவரை அழைத்து கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றேன்,, அவர் மருத்துவரிடம் சிகிச்சைக்கான விளக்கங்களை அறிந்து கொண்டு தன் மகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவுசெய்து உள்ளார்..

இவரை போன்று சில பேர் இந்த கணுக்கால் ஊனத்திற்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரம் தெரியாமல் உள்ளனர்,,

 அவர்களுக்கான பதிவு தான் இது..

தற்பொழுது என் மகன் குணமடைந்து மற்ற குழந்தைகளை போலவே ஓடியாடி விளையாடுகிறான்..

இது போன்று கணுக்கால் உள்வளைவு ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நீங்கள் காண நேர்ந்தால் எனக்கு தெரிவிக்கவும்..

சுபான் எஸ்.எம்.





ஆமணக்கு மூலிகை மருத்துவ குணங்களும் நலன்களும்





ஆமணக்கு  வேர்,  இலை, எண்ணெய் ஆகியவை கசப்புச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. 




• இலை |
 வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும். தாய்ப்பால் பெருக்கும்.

• வேர் | 
வாதநோய்களைக் குணமாக்கும். 



• விதை |
வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். 



• எண்ணெய் |
 மலமிளக்கும், வறட்சியகற்றும்.










•பெயர்கள்|
சித்திரம், தலரூபம்  ஏரண்டம், பெயர்களும் ஆமணக்கிற்கு உண்டு. விதைக்கு முத்துக்கொட்டை என்கிற பெயரும் உண்டு.தமிழகம் முழுவதும் இதன் கொட்டை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்காக (முத்துக்கொட்டை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய்) வயல்வெளிகளின் ஓரங்களிலும் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலும் வளர்க்கப்படுகின்றது.


விளக்கு எரிப்பதற்கு ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பெருமளவில் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் வந்தது. 



•வகைகள்|

ஆமணக்கில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செல்வாமணக்கு ஆகிய மூன்று வகைகள் உள்ளன. சிற்றாமணக்கிற்கும் பேராமணக்கிற்கும் உள்ள முக்கிய வேற்றுமை அவற்றின் விதையின் அளவைப் பொறுத்தது.சிற்றாமணக்கு சிறிய அளவுள்ள விதையும், பேராமணக்கு பெரிய அளவுள்ள விதையும் கொண்டது. இந்த இரண்டு வகைகளுக்கும் மருத்துவப் பயன் ஒன்றுதான் என்பதாகவே பெரும்பாலான மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். சிவப்பான விதை மூலமாக செல்வாமணக்கு என்கிற மூன்றாவது வகை பிரித்தறியப்படுகின்றது.

•குறிப்புகள்|
ஆமணக்கு விதையின் மேல்தோலை நீக்கி, பருப்பை அரைத்து, பசையாக்கி, கட்டிகளின் மீது பூசிவர கட்டிகள் உடையும்.
ஆமணக்கு இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல அரைத்து எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் மட்டும் உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். 3 நாட்கள் இவ்வாறு செய்ய மஞ்சள் காமாலை குணமாகும். இந்த நாட்களில் உணவில் புளி, உப்பு நீக்கிப் பத்தியம் கடைபிடிக்க வேண்டும்.

2  தேக்கரண்டி ஆமணக்கு என்னையும் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்து உள்ளுக்குள் கொடுக்க மலச்சிக்கல் தீரும். வயிற்றுபோக்கு ஏற்பட  வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் 2 டம்ளர் மோர் குடிக்கலாம். 
ஆமணக்கு இலையை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும்.மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் புண்கள் குணமாக ஆமணக்கு எண்ணெயைத் தூய்மையான, மெல்லிய பருத்தித் துணியில் ஊறவைத்து, அதை பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட்டுவர வேண்டும்.



4 தேக்கரண்டி அளவு ஆமணக்கு எண்ணெய், 1 தேக்கரண்டி அளவு தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்து உள்ளுக்குள் சாப்பிட சுகபேதியாகும். சிறுவர்களுக்கு இந்த அளவில் பாதியும், கைக்குழந்தைகளுக்கு இந்த அளவில் நான்கில் ஒரு பங்கும் தரலாம். இது ஒரு சிறந்த கை மருந்தாகும்.தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க பசுமையான ஆமணக்கு இலையை நெய் தடவி, அனலில் இலேசாக வதக்கி, இளஞ்சூடான நிலையில் மார்பில் வைத்துக் கட்டலாம். அல்லது ஆமணக்கு இலையைச் சிறு துண்டுகளாக அரிந்து, தேவையான அளவு துவரம் பருப்பு சேர்த்து கீரையாகச் செய்து சாப்பிட்டு வர
கீரையாகச் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.ஆமணக்கு விதைகளைப் பச்சையாக அல்லது காய்ந்த நிலையில் பச்சையாக சாப்பிடுவது மிகவும் நச்சுத்தன்மையானது மரணம் கூட நிகழலாம்...


யார் போராட்டம் நடத்தினாலும் CAA -வை திரும்பப் பெற மாட்டோம்' - அமித் ஷா திட்டவட்டம்



CAA,CAB,NRC,NPR, சட்ட திருத்தம்செய்யப்பட்டது மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பெண்கள், ஏராளமான பிரபலங்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களை குறி வைத்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.




யார் போராட்டம் நடத்தினாலும் குடியுரிமை சட்ட திருத்தமான CAA -யை திரும்பப் பெற மாட்டோம் எனறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில்  குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, 'இங்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். குடியுரிமை சட்ட திருத்தம் ஒருபோதும் திரும்பப்பெறப்பட மாட்டாது. யார் போராட்டம் நடத்தினாலும் சரி. எதிர்க்கட்சிகளால் நாங்கள் பயந்துபோகவில்லை' என்று அவர் தெரிவித்தார்.

லக்னோவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் அதிகளவு நடக்கின்றன. இங்கு ஆண்ட கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை அமித் ஷா கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், 'மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நாட்டின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக விவாதத்தை நாம் வைத்துக் கொள்ளலாம். பங்கெடுக்க நீங்கள் தயாரா?' என்று கேள்வி எழுப்பினார். 

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை அளிப்பதாகவும், இதுபோன்ற சட்டங்கள் தேவை என்றும், பிரிவினை மற்றும் வாக்குவங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டினார்.


'மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் இங்கு தீவிரவாத தாக்குதல்களை நடத்தின. அப்போது மன்மோகன் சிங் எனும் மவுன சாமியார் அதுபற்றி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இன்றைக்கு உத்தரப்பிரதேசம் பாஜகவுக்கு முழு ஆதரவு தெரிவித்ததால், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் மோடி மத்தியில் ஆட்சியை அமைத்துள்ளார்.' என்று அமித் ஷா பேசினார்.



குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் உத்தரப்பிரதேசம் அதிக உயிரிழப்புகளை சந்தித்திருக்கிறது. இங்கு 20 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். துப்பாக்கிச் சூட்டை தாங்கள் நடத்தவில்லை என்று போலீஸ் தரப்பு கூறுகிறது. போராட்டக்காரர்களுக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டிருக்கிறது.



கடந்த ஒருவார காலமாக லக்னோவில் பெண்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஷாகீன் பாக்கில் நடைபெற்ற போராட்டத்தைப்போல இது அமைந்துள்ளது. இதற்கிடையே, போராட்டத்தை சீர்குலைக்க முயல்வதாக போலீசார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமைதிப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில் பிரபல உருது கவிஞர் முனவ்வர் ரானாவின் மகள்களான சுமையா ரானா, பவுசியா ரானா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



போலீசார் 24 மணிநேர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் போராட்டக்காரர்களின் போர்வைகளை பறித்துச் சென்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அவர்கள் மறுத்திருக்கிறார்கள்.


அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமை சட்ட திருத்தம் குடியுரிமையை வழங்கும். இது முஸ்லிம்களுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்று கூறி போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.



இந்த சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேடு எனப்படும் என்.ஆர்.சி.க்கும் மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பெண்கள், ஏராளமான பிரபலங்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களை குறி வைத்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

உருளைக்கிழங்கு பீட்சா தோசை செய்வது மிகவும் எளிதானது.!!


Potato Pizza Dosai
தேவையான பொருட்கள்

மைதா - 1 கப், கோதுமை மாவு - 1 கப், அரிசி மாவு - 1 கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, ரவை - 1/4 கப், தக்காளி - 2 கப், வெங்காயம் - 2, குடைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், துருவிய சீஸ் - 1 கப், உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - சிறிது, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகு தூள் - 1 டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 250 கிராம், பச்சைமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை


வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.


வேறு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும். 

தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.