Forbes சொல்லிவிட்டது விவேகம் சூப்பர் ஹிட் என்று!

விவேகம் படத்தின் வெற்றி என்று அஜித் ரசிகர்கள் தரப்பும் தோல்வி என்று அஜித்தை பிடிக்காதவர்கள் தரப்பும் கூறி வரும் நிலையில் உலகின் முன்னணி பிசினஸ் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஊடகமே விவேகம் சூப்பர் ஹிட் என்று செய்தி வெளியிட்டுள்ளது.


நான்கு நாட்களில் 'விவேகம்' படத்தின் இந்திய வசூல் ரூ.69.5 கோடி என்றும், வெளிநாட்டு வசூல் ரூ.36.5 கோடி என்றும் மொத்தம் ரூ.106 கோடி ரூபாய் வசூல் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.127 கோடி என்ற நிலையில் சாட்டிலைட் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் மற்றும் நான்கு நாள் வசூல் ஆகியவைகளை சேர்த்தால் இந்த படம் தற்போதே லாபம் என்றும் இனிமேல் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் லாபம் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் இந்த படம் நான்கு நாட்களில் சுமார் ரூ.6 கோடி வசூல் செய்து 'கபாலி' மற்றும் 'பாகுபலி 2' வசூலை மிஞ்சிவிட்டதாகவும் அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனத்தையும் தாண்டி இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது

நான் ஜெயலலிதாவின் மகள் டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் ஜனாதிபதி- பிரதமருக்கு பெண் கடிதம்

பெங்களூரு:

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் இருக்கும் வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா (வயது 38) என்ற பெண் ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 1960-ம் ஆண்டு பிரபல நடிகையாக இருந்த என் பாட்டி சந்தியா- ஜெயராம் தம்பதியின் 3 பிள்ளைகளில் என் தாய், ஜெயலலிதா என்கிற கோமளவள்ளியும் ஒருவர். அவர் மகள் தான் நான். என் பெயர் மஞ்சுளா என்கிற அம்ருதா என்றும், அம்மு என்றும் என்னை செல்லமாக அழைப்பர். பெற்றோரை இழந்த பின் என் தாய் மன அழுத்தத்துக்கு ஆளானார். அப்போது தெலுங்கு நடிகர் சோபன்பாபு என் தாய் மீது அதிக அக்கறை காட்டினார். அவர் பராமரிப்பில் என் தாயார் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். அவர்கள் இடையிலான நட்பு காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். திருமணம் செய்ய முடிவு செய்தனர் என்றாலும், சோபன்பாபுவின் முதல் மனைவியின் எதிர்ப்பால், திருமணம் நின்று போனது.

கர்ப்பமாக இருந்த என் தாய், 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி என்னை பெற்றெடுத்தார். சம்பிரதாயமிக்க குடும்பம் என்பதால் ஜெயலலிதா, சோபன்பாபு உறவை ஏற்க எங்கள் குடும்பத்தினர் மறுத்தனர். இதனால் தன் குழந்தையை தன் சகோதரி சைலஜாவிடம் என் தாய் ஒப்படைத்தார். பெங்களூருவில் பணியாற்றி வந்த சைலஜா-சாரதி தம்பதியினர் என்னை சொந்த மகளாகவே வளர்த்து வந்தனர். ஆனால், ஜெயலலிதாவின் மகள் என்ற ரகசியத்தை எங்கும் கூறவில்லை. அவர்களிடம் ஜெயலலிதா சத்தியம் வாங்கியுள்ளதாக தெரிகிறது.

1996-ல் என்னிடம் ஒரு சீட்டு எழுதி கொடுத்த சைலஜா சென்னை சென்று ஜெயலலிதாவை சந்தித்து வரும்படி கூறினார். நானும், போயஸ் கார்டனுக்கு சென்று அவரை சந்தித்தேன். என்னை பார்த்தவுடன் வாரி அணைத்து பாசத்தை காட்டி உபசரித்தார். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதன் பின் பலமுறை அவரை சந்தித்தேன். ஆனால் ஒரு முறை கூட என் சொந்த தாய் என்று கூறியதில்லை. எந்த காரணத்தினாலும் அரசியலுக்கும், சினிமாவுக்கும் வரவேண்டாம் என என்னை எச்சரித்திருந்தார்.

ஜெயலலிதா இறந்த பின் தீபா, தீபக் ஆகியோர் தான் என் அம்மாவின் சொத்துக்கு வாரிசுதாரர்கள் என செய்தி வெளியானது. இதை பார்த்த அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, ஜெயலலிதாவின் ஒரே மகள் நான் தான் என்பதை என்னிடம் கூறினார். பசவனகுடியில் வசிக்கும் மற்றொரு உறவினர் லலிதாவும், இவ்வி‌ஷயத்தை உறுதிபடுத்தினார். நான் பிறந்தபோது ரஞ்சினி ரவீந்திரநாத், லலிதா ஆகியோரும் என் தாயாரை பராமரித்துள்ளனர்.

அவர்களுக்கு என் பிறப்பு ரகசியம் தெரிந்துள்ளது. ஜெயலலிதாவின் இறப்பு இயற்கையான மரணம் அல்ல. உடல் நிலை பாதிப்பாலும் அவர் இறக்கவில்லை. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளார். எனவே, சசிகலா நடராஜன், தினகரன், தீபக் ஜெயகுமார், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

என் தாய் ஜெயலலிதா இறப்புக்கு சசிகலா உள்பட பலரும் காரணம். இது தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ., சிறப்பு குழு விசாரணை நடத்த வேண்டும். இறப்பின் காரணத்தை தெரிந்து கொள்ள அவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். என் தாய், அவர் தான் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. என்னும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் மஞ்சுளா கூறியுள்ளார். 

உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி - பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்திய வீரர்


ஜெர்மனியில் நடைபெற்று வரும், உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் இந்திய வீரர்கவுரவ் பிதூரி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 
உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் கவுரவ் பிதூரி, 56 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதி ஆட்டத்தில், துனிஷியாவின் பிலிக் மஹம்தியை தோற்கடித்தார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் குறைந்தபட்டம் வெண்கலப் பதக்கத்தையும் அவர் உறுதி செய்துள்ளார். ‌உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங், விகாஷ் கிரிஷன், ஷிவதாபா ஆகியோருக்கு பிறகு, பதக்கம் வெல்லும் நான்காவது இந்திய வீரர் என்ற சிறப்பையும் கவுரவ் பிதூரி பெறுகிறார். அமித் பாங்கல், கவிந்தர் பிஸ்த் ஆகிய இந்திய வீரர்கள் காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினர்.