Date for real


                    Tantan Date for Real
                    Click to Download
              https://play.google.com/store/apps/details?id=com.p1.mobile.putong

மழை நீர் தேக்கம், சாலை பழுது, பள்ளம் உள்ளிட்ட பிரச்சினைகள்; சென்னை மாநகராட்சி வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பலாம்: ஆணையர் பிரகாஷ்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம் குறித்த புகார்களை 24/7 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம் என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் பொறுப்பேற்றது முதல் அதிகாரிகள், கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் புகார் வந்தால் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு நேரடியாக வரும் புகார்களையும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி அதைச் சரி செய்தபின்னர் அந்தப் படத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

இதேபோன்று பொதுமக்கள் புகார்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்க சென்னை மாநகராட்சி வாட்ஸ் அப் எண் ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க வகை செய்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அறிவிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்குப் பருமழையின் காரணமாக தங்கள் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் மழைநீர் தேக்கம், சாய்ந்த மரக்கிளைகள் மற்றும் இதர புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இயங்கும் 24/7 மணிநேரம் கட்டுப்பாட்டு அறையின் 044-25384520, 044- 25384530, 044-25384540 தொலைபேசி எண்களுக்கும், 9445477205 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின் உத்தரவின்படி அமைச்சர் வேலுமணி தலைமையில் தொடர்புடைய துறைகளுடன் பல்வேறுகட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று மாநகராட்சி
நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் 16 சுரங்கப்பாதைகளும், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் 6 சுரங்கப்பாதைகளும் உள்ளன. இவ்விடங்களில் மழைநீர் வெளியேற்ற ஏதுவாக 60 எண்ணிக்கையில் உயரழுத்த பம்புகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 570 மோட்டார் பம்புகள், தயார் நிலையில் உள்ளன.
மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழைவெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகளும், பொதுமக்களைத் தங்க வைக்க 176 நிவாரண மையங்களும், உணவு வழங்கிட 4 பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்கு சமையல் செய்யத் தேவையான பொருட்களும் உள்ளன.
அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்களும், மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களும், 52 இடங்களில் பேரிடர் மீட்புக்குழுக்களும் தயார்நிலையில் உள்ளன.
பருவமழையின்போது சாலைகளில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மண்டலத்திற்கு 1 இரவு பணிக்குழுவும், 18 உயர் கோபுர விளக்குகளும் தயார் நிலையில் உள்ளன. அவரசகாலப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 108 ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களும், 126 லாரிகளும் தயார் நிலையில் உள்ளன.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 /7 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
இக்கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர், தமிழ் நாடு மின்வாரிய அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு சுழற்சி முறையில் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றனர்

வேலூரிடமிருந்து இன்று விடைபெறும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை


புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 புதிய மாவட்டங்களை எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
திருப்பத்தூர்

ராணிப்பேட்டை

தமிழகத்தின் பெரிய மாவட்டமான‌ வேலூரைப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை தலைமையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டு, மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இவ்விரு மாவட்டங்களின் நிர்வாகப் பணிகளைத் தொடங்கும்வகையில், இன்று தொடக்க விழா நடைபெறுகிறது.

35 வது மாவட்டமான திருப்பத்தூரை, அங்குள்ள டான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, 36 வது மாவட்டமான ராணிப்பேட்டையின் தொடக்கவிழா, ராணிப்பேட்டை கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது.

தாய் மாவட்டமான வேலூரிலிருந்து திருப்பத்தூரும், ராணிப்பேட்டையும் விடைபெற்றுக் கொள்ளும் இந்த விழாக்களில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

#Dailyind

ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும்!


                ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
                இதுவரை 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால்,
சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 139-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.
                இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது.
                எப்படி இந்த சேவையைப் பெறுவது?
                 முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள்.

வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள்.
               வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்புங்கள்.
                அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் ரயில் எண், அதன் பெயர், எந்தத் தேதியில் ரயில் கிளம்பியது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டியுள்ளது, அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கி இருக்கும்.
              அதுமட்டுமல்லாமல், 'நான் உங்களுக்கு சிறந்த சேவையை அளித்திருக்கிறேனா?' என்று கேள்வி எழுப்பபட்டு, கருத்தும் கேட்கப்படுகிறது.
             இந்த சேவையை ரயில்வே துறை, 'மேக் மை ட்ரிப்' உடன் இணைந்து அளிக்கிறது.
              இதனால் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாகவே நமக்குத் தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் லைவ் ஆகத் தெரிந்துகொள்ள முடியும்.
7349389104.

#dailyind #trainlivestatus #trainlivearrivaltime 

அசத்தலான MI டீவி 5 சீனாவில் அறிமுகம் ஆனது...



MI  TV 4க்கு, அடுத்து  MITV 5 ஜியோமி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது.


Mi TV 4 தொடரை விட டிவியின் Frame ஸ்லிம்மானது.


ஜியோமியின் தொலைக்காட்சி விற்பனை சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு முக்கிய சந்தைகளில் சில வெற்றிகளைக் கண்டன. தற்போதைய Mi TV 4 version இரு நாடுகளிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிறது. ஜியோமியின் சொந்த சந்தையான சீனாவில் நவம்பர் 5 ஆம் தேதி நிறுவனம் தனது அடுத்த தொலைக்காட்சியான Mi TV 5 தொடரை வெளிப்படுத்தி உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, நிறுவனம் தொலைக்காட்சித் தொடரின் சில விவரங்களை வெளிப்படுத்த சீன சமூக வலைதளம் வெய்போவிற்கு அழைத்துச் சென்றுள்ளது.


நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Mi TV கணக்கிலிருந்து Weibo-வில் ஒரு பதிவின் படி, புதிய டிவி வரம்பு நான்கு  ஸ்பீக்கருடன் (4 speaker) வரும். இந்த பதிவு இடது மற்றும் வலது சேனல்களில் ஒவ்வொன்றும் ஒரு வூஃபர் (Woofer) மற்றும் முழு அளவிலான ஸ்பீக்கரைக் கொண்டிருப்பதாக விவரிக்கிறது. better base, finer treble மற்றும் wide sound field ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. இது தவிர, டிவி பல்வேறு டால்பி (Dolby) மற்றும் டிடிஎஸ் (DTS) ஆடியோ ஃபார்மெட்களை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.

புதிய தொலைக்காட்சித் தொடரின் வடிவமைப்பை விவரிக்கும் இரண்டாவது பதிவின் மூலம் மேலும் சில விவரங்கள் வெளிவந்தன. Mi TV 5 வரம்பு, Mi TV 4-ஐ விட 47 சதவீதம் மெல்லியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொலைக்காட்சிகளுக்கு சிறந்த திரை முதல் உடல் விகிதம் (better screen-to-body ratio) மற்றும் இறுக்கமான மூலைகளை (Tighter Corners) வழங்குகிறது. தடிமன் 5.9mm வரை குறைவாக Metal Body மற்றும் Back Plate போலவே மெலிதாக இருக்கும்.


இந்தத் தொடர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்புடன் Amlogic T972 பிராசசரோடு அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது - இது தொலைக்காட்சி பிரிவுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகம். இது ஒருபுறம் இருக்க, HDR10 + மற்றும் MEMC ஆதரவும் இருப்பதாக கூறப்படுகின்றன.

இந்நிறுவனம் சமீபத்தில் தீபாவளி பண்டிகை காலத்திற்காக இந்தியாவில் பெரிய விற்பனை எண்களைப் பதிவுசெய்தது. அனைத்து சேனல்களிலும் 24 நாட்களில் 5,00,000 Mi TV யூனிட்களை விற்றதாகக் கூறியது. Mi TV 5 தொடரும் பிற்காலத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 5 வெளியீடு சீனாவுக்கு மட்டும்.