MI TV 4க்கு, அடுத்து MITV 5 ஜியோமி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
Mi TV 4 தொடரை விட டிவியின் Frame ஸ்லிம்மானது.
ஜியோமியின் தொலைக்காட்சி விற்பனை சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு முக்கிய சந்தைகளில் சில வெற்றிகளைக் கண்டன. தற்போதைய Mi TV 4 version இரு நாடுகளிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிறது. ஜியோமியின் சொந்த சந்தையான சீனாவில் நவம்பர் 5 ஆம் தேதி நிறுவனம் தனது அடுத்த தொலைக்காட்சியான Mi TV 5 தொடரை வெளிப்படுத்தி உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, நிறுவனம் தொலைக்காட்சித் தொடரின் சில விவரங்களை வெளிப்படுத்த சீன சமூக வலைதளம் வெய்போவிற்கு அழைத்துச் சென்றுள்ளது.
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Mi TV கணக்கிலிருந்து Weibo-வில் ஒரு பதிவின் படி, புதிய டிவி வரம்பு நான்கு ஸ்பீக்கருடன் (4 speaker) வரும். இந்த பதிவு இடது மற்றும் வலது சேனல்களில் ஒவ்வொன்றும் ஒரு வூஃபர் (Woofer) மற்றும் முழு அளவிலான ஸ்பீக்கரைக் கொண்டிருப்பதாக விவரிக்கிறது. better base, finer treble மற்றும் wide sound field ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. இது தவிர, டிவி பல்வேறு டால்பி (Dolby) மற்றும் டிடிஎஸ் (DTS) ஆடியோ ஃபார்மெட்களை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.
புதிய தொலைக்காட்சித் தொடரின் வடிவமைப்பை விவரிக்கும் இரண்டாவது பதிவின் மூலம் மேலும் சில விவரங்கள் வெளிவந்தன. Mi TV 5 வரம்பு, Mi TV 4-ஐ விட 47 சதவீதம் மெல்லியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொலைக்காட்சிகளுக்கு சிறந்த திரை முதல் உடல் விகிதம் (better screen-to-body ratio) மற்றும் இறுக்கமான மூலைகளை (Tighter Corners) வழங்குகிறது. தடிமன் 5.9mm வரை குறைவாக Metal Body மற்றும் Back Plate போலவே மெலிதாக இருக்கும்.
இந்தத் தொடர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்புடன் Amlogic T972 பிராசசரோடு அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது - இது தொலைக்காட்சி பிரிவுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகம். இது ஒருபுறம் இருக்க, HDR10 + மற்றும் MEMC ஆதரவும் இருப்பதாக கூறப்படுகின்றன.
இந்நிறுவனம் சமீபத்தில் தீபாவளி பண்டிகை காலத்திற்காக இந்தியாவில் பெரிய விற்பனை எண்களைப் பதிவுசெய்தது. அனைத்து சேனல்களிலும் 24 நாட்களில் 5,00,000 Mi TV யூனிட்களை விற்றதாகக் கூறியது. Mi TV 5 தொடரும் பிற்காலத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 5 வெளியீடு சீனாவுக்கு மட்டும்.



0 Comment to "அசத்தலான MI டீவி 5 சீனாவில் அறிமுகம் ஆனது..."
Post a Comment