Categories
- android 9 pie 1
- breaking news 2
- business 1
- Chennai Red Alert 2
- Cinema 2
- Comedy 1
- Economy 1
- education 2
- English News 1
- google pixel 1
- Govt Loans 1
- Health Tips 2
- Insurance 1
- kerela cm 1
- kerela flood 1
- Malayalam songs 1
- Movie Ticket Booking 1
- OFFERS 2
- Question and Answers 1
- recent 1
- smartphone 3
- spares 1
- sports 1
- Technology 1
- TNPSC 1
- பிசினஸ் 1
Powered by Blogger.
Menu Footer Widget
Labels
Contact Form
Followers
Search This Blog
Tags
Science
2/Science/grid-big
How To
3/How%20To/grid-small
Computer
3/Computer/col-left
Technology
3/Technology/post-list
Technology
3/Technology/col-right
Popular Posts
-
நிர்பயா பாலியல் குற்ற வழக்கின் குற்றவாளிகள் கருணை மனு நிராகரித்தார் குடியரசு தலைவர்,16ம் தேதி அதிகாலை தூக்கிலப்படுகின்றனர்!
-
1. #Breaking :புதுச்சேரியில் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை * முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு * கொரோனா தடுப்பு நடவடிக்கை...
-
உங்கள் நிறுவன முதலீட்டாளர்களின் பணத்தை உங்கள் சொந்த பணத்தை விட கவனமாக காத்திடுங்கள். இரண்டாவதாக, ஒரு நல்ல குழு இல்லாமல் உங்களால் சாதி...
Pages
Random Posts
3/random/post-list
Css Options
Social
Technology/hot-posts
Default Variables
Popular Posts
-
நிர்பயா பாலியல் குற்ற வழக்கின் குற்றவாளிகள் கருணை மனு நிராகரித்தார் குடியரசு தலைவர்,16ம் தேதி அதிகாலை தூக்கிலப்படுகின்றனர்!
-
1. #Breaking :புதுச்சேரியில் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை * முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு * கொரோனா தடுப்பு நடவடிக்கை...
-
உங்கள் நிறுவன முதலீட்டாளர்களின் பணத்தை உங்கள் சொந்த பணத்தை விட கவனமாக காத்திடுங்கள். இரண்டாவதாக, ஒரு நல்ல குழு இல்லாமல் உங்களால் சாதி...
மழை நீர் தேக்கம், சாலை பழுது, பள்ளம் உள்ளிட்ட பிரச்சினைகள்; சென்னை மாநகராட்சி வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பலாம்: ஆணையர் பிரகாஷ்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம் குறித்த புகார்களை 24/7 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம் என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் பொறுப்பேற்றது முதல் அதிகாரிகள், கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் புகார் வந்தால் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு நேரடியாக வரும் புகார்களையும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி அதைச் சரி செய்தபின்னர் அந்தப் படத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
இதேபோன்று பொதுமக்கள் புகார்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்க சென்னை மாநகராட்சி வாட்ஸ் அப் எண் ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க வகை செய்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அறிவிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்குப் பருமழையின் காரணமாக தங்கள் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் மழைநீர் தேக்கம், சாய்ந்த மரக்கிளைகள் மற்றும் இதர புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இயங்கும் 24/7 மணிநேரம் கட்டுப்பாட்டு அறையின் 044-25384520, 044- 25384530, 044-25384540 தொலைபேசி எண்களுக்கும், 9445477205 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின் உத்தரவின்படி அமைச்சர் வேலுமணி தலைமையில் தொடர்புடைய துறைகளுடன் பல்வேறுகட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று மாநகராட்சி
நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் 16 சுரங்கப்பாதைகளும், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் 6 சுரங்கப்பாதைகளும் உள்ளன. இவ்விடங்களில் மழைநீர் வெளியேற்ற ஏதுவாக 60 எண்ணிக்கையில் உயரழுத்த பம்புகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 570 மோட்டார் பம்புகள், தயார் நிலையில் உள்ளன.
மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழைவெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகளும், பொதுமக்களைத் தங்க வைக்க 176 நிவாரண மையங்களும், உணவு வழங்கிட 4 பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்கு சமையல் செய்யத் தேவையான பொருட்களும் உள்ளன.
மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழைவெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகளும், பொதுமக்களைத் தங்க வைக்க 176 நிவாரண மையங்களும், உணவு வழங்கிட 4 பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்கு சமையல் செய்யத் தேவையான பொருட்களும் உள்ளன.
அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்களும், மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களும், 52 இடங்களில் பேரிடர் மீட்புக்குழுக்களும் தயார்நிலையில் உள்ளன.
பருவமழையின்போது சாலைகளில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மண்டலத்திற்கு 1 இரவு பணிக்குழுவும், 18 உயர் கோபுர விளக்குகளும் தயார் நிலையில் உள்ளன. அவரசகாலப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 108 ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களும், 126 லாரிகளும் தயார் நிலையில் உள்ளன.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 /7 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
இக்கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர், தமிழ் நாடு மின்வாரிய அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு சுழற்சி முறையில் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றனர்
பருவமழையின்போது சாலைகளில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மண்டலத்திற்கு 1 இரவு பணிக்குழுவும், 18 உயர் கோபுர விளக்குகளும் தயார் நிலையில் உள்ளன. அவரசகாலப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 108 ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களும், 126 லாரிகளும் தயார் நிலையில் உள்ளன.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 /7 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
இக்கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர், தமிழ் நாடு மின்வாரிய அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு சுழற்சி முறையில் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றனர்
வேலூரிடமிருந்து இன்று விடைபெறும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 புதிய மாவட்டங்களை எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
திருப்பத்தூர்
![]() |
| ராணிப்பேட்டை |
தமிழகத்தின் பெரிய மாவட்டமான வேலூரைப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை தலைமையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டு, மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இவ்விரு மாவட்டங்களின் நிர்வாகப் பணிகளைத் தொடங்கும்வகையில், இன்று தொடக்க விழா நடைபெறுகிறது.
35 வது மாவட்டமான திருப்பத்தூரை, அங்குள்ள டான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, 36 வது மாவட்டமான ராணிப்பேட்டையின் தொடக்கவிழா, ராணிப்பேட்டை கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது.
தாய் மாவட்டமான வேலூரிலிருந்து திருப்பத்தூரும், ராணிப்பேட்டையும் விடைபெற்றுக் கொள்ளும் இந்த விழாக்களில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
#Dailyind
ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும்!
ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
இதுவரை 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால்,
சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 139-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது.
எப்படி இந்த சேவையைப் பெறுவது?
முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள்.
வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள்.
வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்புங்கள்.
அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் ரயில் எண், அதன் பெயர், எந்தத் தேதியில் ரயில் கிளம்பியது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டியுள்ளது, அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கி இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், 'நான் உங்களுக்கு சிறந்த சேவையை அளித்திருக்கிறேனா?' என்று கேள்வி எழுப்பபட்டு, கருத்தும் கேட்கப்படுகிறது.
இந்த சேவையை ரயில்வே துறை, 'மேக் மை ட்ரிப்' உடன் இணைந்து அளிக்கிறது.
இதனால் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாகவே நமக்குத் தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் லைவ் ஆகத் தெரிந்துகொள்ள முடியும்.
7349389104.
#dailyind #trainlivestatus #trainlivearrivaltime
அசத்தலான MI டீவி 5 சீனாவில் அறிமுகம் ஆனது...
MI TV 4க்கு, அடுத்து MITV 5 ஜியோமி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
Mi TV 4 தொடரை விட டிவியின் Frame ஸ்லிம்மானது.
ஜியோமியின் தொலைக்காட்சி விற்பனை சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு முக்கிய சந்தைகளில் சில வெற்றிகளைக் கண்டன. தற்போதைய Mi TV 4 version இரு நாடுகளிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிறது. ஜியோமியின் சொந்த சந்தையான சீனாவில் நவம்பர் 5 ஆம் தேதி நிறுவனம் தனது அடுத்த தொலைக்காட்சியான Mi TV 5 தொடரை வெளிப்படுத்தி உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, நிறுவனம் தொலைக்காட்சித் தொடரின் சில விவரங்களை வெளிப்படுத்த சீன சமூக வலைதளம் வெய்போவிற்கு அழைத்துச் சென்றுள்ளது.
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Mi TV கணக்கிலிருந்து Weibo-வில் ஒரு பதிவின் படி, புதிய டிவி வரம்பு நான்கு ஸ்பீக்கருடன் (4 speaker) வரும். இந்த பதிவு இடது மற்றும் வலது சேனல்களில் ஒவ்வொன்றும் ஒரு வூஃபர் (Woofer) மற்றும் முழு அளவிலான ஸ்பீக்கரைக் கொண்டிருப்பதாக விவரிக்கிறது. better base, finer treble மற்றும் wide sound field ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. இது தவிர, டிவி பல்வேறு டால்பி (Dolby) மற்றும் டிடிஎஸ் (DTS) ஆடியோ ஃபார்மெட்களை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.
புதிய தொலைக்காட்சித் தொடரின் வடிவமைப்பை விவரிக்கும் இரண்டாவது பதிவின் மூலம் மேலும் சில விவரங்கள் வெளிவந்தன. Mi TV 5 வரம்பு, Mi TV 4-ஐ விட 47 சதவீதம் மெல்லியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொலைக்காட்சிகளுக்கு சிறந்த திரை முதல் உடல் விகிதம் (better screen-to-body ratio) மற்றும் இறுக்கமான மூலைகளை (Tighter Corners) வழங்குகிறது. தடிமன் 5.9mm வரை குறைவாக Metal Body மற்றும் Back Plate போலவே மெலிதாக இருக்கும்.
இந்தத் தொடர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்புடன் Amlogic T972 பிராசசரோடு அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது - இது தொலைக்காட்சி பிரிவுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகம். இது ஒருபுறம் இருக்க, HDR10 + மற்றும் MEMC ஆதரவும் இருப்பதாக கூறப்படுகின்றன.
இந்நிறுவனம் சமீபத்தில் தீபாவளி பண்டிகை காலத்திற்காக இந்தியாவில் பெரிய விற்பனை எண்களைப் பதிவுசெய்தது. அனைத்து சேனல்களிலும் 24 நாட்களில் 5,00,000 Mi TV யூனிட்களை விற்றதாகக் கூறியது. Mi TV 5 தொடரும் பிற்காலத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 5 வெளியீடு சீனாவுக்கு மட்டும்.
சன் தொலைக்காட்சி மூத்த ஒளிப்பதிவாளர் செந்தில் இன்று காலமானார்.
உயர் ரத்த அழுத்தத்தால் குருதிக் குழாய்கள் வெடித்து, உயிருக்கு போராடி வந்த சன் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் பி.செந்தில்குமார், இன்று 9/11/2019, காலை 10 மணியளவில் இயற்கையை அடைந்து விட்டார் என்பதை அடக்க முடியாத வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
சென்னை ராஜுவ்காந்தி மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், அவரை காப்பாற்ற முடியாமல், உற்றாற், உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் என பலரையும் கவலையில் ஆழ்த்தி, காற்றோடு கலந்து விட்டார் செந்தில்.
அன்பும், அமைதியும் நிறைந்த கடின உழைப்பாளியான தன்னலமற்ற செந்தில், தனது உடல் நலத்தில் உரிய அக்கறையை செலுத்தாததால், மனைவி மற்றும் இரண்டு சிறு பிள்ளைகளை கண்ணீர் கடலில் கவிழ்த்து விட்டார்.
எண் 58, மூன்றாவது பிரதான சாலை, ஜெயராம் நகர், டான் பாஸ்கோ பள்ளி அருகில், கொளத்தூர், சென்னை-99, என்ற முகவரியில் வசித்த அவரது இல்லத்தில் பெ.செந்தில்குமாரின் உடல், நாளை (10/11/19) ஞாயிறு காலை 9 மணி வரை வைக்கப்பட்டு, இறுதி மரியாதைகள் செய்யப்படும்.
குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி, அன்பு செலுத்திய உறவுகளுக்கு ஆறாத் துயரத்தை அளித்த செந்திலின் கனவுகள் நிறைவேற, தூய உள்ளங்கள் துணை நிற்கட்டும்...
பாபர் மசூதி வழக்கின் 70 ஆண்டு கால வரலாறு
2003ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல்துறை மேற்கொண்ட ஆய்வில், மசூதியின்கீழே ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி விவகாரம் கடந்த பல ஆண்டுகளாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், வழக்கு கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்வோம்.
ராமர் ஜென்மபூமி - பாபர் மசூதி விவகாரம் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் இடையே நீண்ட காலமாக நிலவி வருகிறது. அயோத்தியில் பாபர் மசூதி 16 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தில், பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த *1949* ஆம் ஆண்டு மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாவட்ட நிர்வாகம், மசூதியை மூடி முத்திரையிட்டது.
*1950* ஆம் ஆண்டு பாபர் மசூதியை வழக்கமான வழிபாடுகளுக்காக திறக்க வேண்டும் என ஃபரிசாபாத் நீதிமன்றத்தில், *1950* ஆம் ஆண்டு கோபால் சிங் விஷாரத் என்பவர் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்த்து இதே கோரிக்கையை வலியுறுத்தி பலரும் மனு தாக்கல் செய்தனர்.
பாபர் மசூதி தங்களுக்கு சொந்தமானது என்ற இந்து அமைப்புகளின் வாதத்தை எதிர்த்து, *1961* ஆம் ஆண்டு உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம் வழக்கு தொடர்ந்தது.
பாபர் மசூதியை திறக்கவும், இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதித்து *1986* ஆம் ஆண்டு ஃபரிசாபாத் மாவட்ட நீதிபதி ஹரி சங்கர் பாண்டே உத்தரவிட்டார். இதே ஆண்டில் பாபர் மசூதி செயல்பாட்டுக்குழு அமைக்கப்பட்டது.
*1989* ஆம் ஆண்டு பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் உத்தரபிரதேச உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. திரிலோக் நாத் பாண்டே என்பவர் தன்னை ராமரின் நெருங்கிய நண்பர் எனக்கூறி வழக்கில் இணைத்து கொண்டார்.
*1992* ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பை விசாரிக்க லிபரான் ஆணையத்தை *1992* ஆம் ஆண்டு *டிசம்பர்* 12 ஆம் தேதி அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைத்தார்.
*1993* ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த சிபிஐ, *பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.*
*1994 ஆம் ஆண்டு அக்டோபர் 24* ஆம் தேதி இஸ்மாயில் ஃபரூக் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசூதியில் தொழுகை நடத்துவதால் மட்டுமே இஸ்லாம் முழுமை அடைந்துவிடாது என தெரிவித்தது.
*2001* ஆம் ஆண்டு மே மாதம் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி மீதான குற்றப்பிரிவுகளை சிறப்பு நீதிமன்றம் நீக்கியது.
*2003*ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல்துறை மேற்கொண்ட ஆய்வில், மசூதியின்கீழே ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை இஸ்லாமிய அமைப்புகள் நிராகரித்தன. *2009* ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிக்கை தாக்கல் செய்த லிபரான் ஆணையம், 68 பேர் மீது குற்றம்சாட்டியது.
*2010* ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 பகுதிகளாக பிரித்து, 2 பகுதிகளை இந்து அமைப்புகளிடமும், ஒரு பங்கை முஸ்லீம் அமைப்புகளிடமும் வழங்க உத்தரவிடப்பட்டது.
*2011* - உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்காத வழக்கின் 3 தரப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு 2011 மே மாதம் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
*2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி, மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.*
*2017 மார்ச் 21* ஆம் தேதி - சுப்பிரமணியன்சுவாமியின் மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் காண அறிவுறுத்தியது. அவ்வாறு முன்வந்தால் மத்தியஸ்தம் செய்யத் தயார் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
*2019 ஜனவரி 8 ஆம் தேதி* உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தலைமை நீதிபதி நீங்கலாக எஸ்ஏ பாப்டே, என்வி ரமணா, லலித், சந்திரசவுட் ஆகியோர் இடம்பிடித்தனர்.
*2019 ஜனவரி 10* - இதில் நீதிபதி லலித் வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொண்டார். ஜனவரி 25 2019 - இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்ஏ பாப்டே, சந்திரசவுட், அசோக் பூஷன், எஸ்ஏ நஷீர் ஆகியோர் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டது.
*மார்ச் 8, 2019* - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது. ஆகஸ்ட் 6, 2019 - கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரணை நடைபெற்றது.
*அக்டோபர் 15, 2019* வழக்கு விசாரணையை அக்டோபர் *16ஆம் தேதியுடன் நிறைவு* செய்ய விரும்புவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். அதன்படி, இன்று வழக்கு விசாரணை நிறைவுபெற்றது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
*நவம்பரில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி வரை அயோத்தியில் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது.*
Subscribe to:
Posts (Atom)
Recent
This is one of the best Blog for free Tips and Tricks tutorials about Blogger, Android Tips & Tricks, Earn Money, Computer, How To, SEO Tips & much more. Which can be very very helpful for your daily life.
Learn More →Weekly
-
நிர்பயா பாலியல் குற்ற வழக்கின் குற்றவாளிகள் கருணை மனு நிராகரித்தார் குடியரசு தலைவர்,16ம் தேதி அதிகாலை தூக்கிலப்படுகின்றனர்!
-
1. #Breaking :புதுச்சேரியில் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை * முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு * கொரோனா தடுப்பு நடவடிக்கை...
-
உங்கள் நிறுவன முதலீட்டாளர்களின் பணத்தை உங்கள் சொந்த பணத்தை விட கவனமாக காத்திடுங்கள். இரண்டாவதாக, ஒரு நல்ல குழு இல்லாமல் உங்களால் சாதி...









