#BikeBlast #ElectricBike #BikeShowroom
சென்னையில் இ - பைக்கின் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால்17 இ-பைக்குகள் தீயில் எரிந்து நாசமானது.
போரூரில் ராஜாராம் என்பவர் இ-பைக் ஷோரூம் நடத்தி வருகிறார். இந்த ஷோரூமில் உள்ள ஒரு இ-பைக்கிற்கு சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது எதி்ர்பாராத விதமாக பைக்கில் உள்ள பேட்டரி வெடித்து தீப்பிடித்துள்ளது. இதைப் பார்த்த ஊழியர்கள் அலறியடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியது. இதில் 17 இ-பைக்குகள் எரிந்து சேதமானது. போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Uploaded On 14/04/2022
0 Comment to "அடுத்த சம்பவம்.. வெடித்து சிதறிய இ-பைக் - தீ விபத்தில் கருகிய 17 இ-பைக்குகள்"
Post a Comment