சர்வதேச ஒப்பந்தத்தின் படி அமெரிக்காவிற்கு
இந்தியா Hydroxychloroquine மருந்தை கட்டாயம் வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை காரணம் WTO சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் கீழ் உள்ள மிக முக்கியமான ஒப்பந்தம் TRIPS ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ள நாடுகளாகும்.
அந்த ஒப்பந்தத்தின் படி நெருக்கடியான காலங்களில் ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட மருந்து வேண்டும் என்று கோரினாலும் அல்லது அந்த மருந்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்றாலும் காப்புரிமை (patent) பற்றி கவலை படாமல் உடனடியாக வழங்கி உதவிட வேண்டும். என கத்தார் நாட்டின் தலைநகரத்தில் 2001 இல் நடந்த TRIPS நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதை தோகா பிரகடனம் ( Doha Declaration ) என்று அழைக்கிறார்கள்.
இது குறித்து TRIPS (The Agreement on trade related aspects of intellectual property rights) ஒப்பந்தம் 6 பத்தியில் விவாதிக்கபடுகிறது.
தேவைப்படும் நாடு மருந்து வைத்து இருக்கும் நாட்டிற்கு தெரியப்படுத்தினால் போதும் என்பது தான் விதி. மேற்சொன்ன இந்த விதியை பயன்படுத்தி தான் அமெரிக்கா இந்தியாவிடம்
Hydroxychloroquine என்கிற மருந்தை கொரோனா காலத்தில் கேட்கிறது இல்லை கேட்டு மிரட்டுகிறது. இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட தேவைப்படும் நாடுகளுக்கு கொடுக்க முன் வந்திருக்கிறது.
இந்நிலையில் இந்தியா சர்வதேச ஒப்பந்தத்தின் படி தான் மருந்தை இந்தியா வழங்குகிறது எந்த நாட்டின் அச்சுறுத்தலுக்கும் பயந்து இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் இந்திய ஆட்சியாளர்களிடம் இருந்து அமெரிக்காவுக்கு எதிரான பதில் வர வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
அ. அசோக்
07/04/2020

0 Comment to "மிரட்டும் அமெரிக்கா மிரளும் இந்தியா சர்வதேச ஒப்பந்தம் சொல்லுவது என்ன?? "
Post a Comment