Today gold price in Dubai



 Today gold cost in Dubai is Rs.3,383 not as much as today gold cost in India.

Dirham to India Rupee transformation rate: 1 = 20.62 . 1 Dirham (AED) equivalents to 20.62 Indian rupee (INR).


24 Karat Gold Price In Dubai.  

2,337.50


Gold Price in Dubai

Weight Gold Price in Dirham (AED) Converted to Indian Rupees (INR)

Ounce 7,270.44 AED ₹149,915.65

1 Gram 233.75 AED ₹4,819.90

2 Grams 467.50 AED ₹9,639.80

5 Grams 1,168.75 AED ₹24,099.50

10 Grams 2,337.50 AED ₹48,199.00


24 22 Karat Gold Price In Dubai Gold Price In Dubai24 Ka


rat Gold Price In Duba

சோறு வரும் வழி.




01. வயல் காட்டைச் சீர்செய்தல்


02. ஏர் பிடித்தல்


03. உழவு ஓட்டுதல்


04. பரம்படித்தல்


05. விதை நெல் சேகரித்தல் 


06. விதை நேர்த்தி செய்தல்


07. விதைகளை நீரில் ஊற  

       வைத்தல்


08. நாற்றங்காலில் விதைத்தல்


09. நாற்றாக வளருதல்


10. நாற்று எடுத்தல்


11. முடிச்சு கட்டுதல்


12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்


13. நடவு நடுதல்


14. களையெடுத்தல்


15. உரமிடுதல்


16. எலியிடம் தப்புதல்


17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்


18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்


19. கதிர் முற்றுதல்


20. கதிர் அறுத்தல்


21. கட்டு கட்டுதல்


22. கட்டு சுமந்து வருதல்


23. களத்துமேட்டில் சேர்த்தல்


24. கதிர் அடித்தல்


25. பயிர் தூற்றல்


26. பதறுபிரித்தல்


27. மூட்டை கட்டுதல்


28. நெல் ஊறவைத்தல்


29. நெல் அவித்தல்


30. களத்தில் காயவைத்தல்


31. மழையிலிருந்து பாதுகாத்தல்


32. நெல் குத்துதல்


33. நொய்யின்றி அரிசியாதல்


34. அரிசியாக்குதல்


35. மூட்டையில் பிடித்தல்


36. விற்பனை செய்தல்


37. எடை போட்டு வாங்குதல்


38. அரிசி ஊறவைத்தல்


39. அரிசி கழுவுதல்


40. கல் நீக்குதல்


41. அரிசியை உலையிடல்


42. சோறு வடித்தல்


43. சோறு சூடு தணிய வைத்தல்


44. சோறு இலையில் இடல்



இத்தனை தடைகளைத் தாண்டி வந்த சோற்றை நாம் முழுவதும் உண்ணாமல் வீணாக்குவது உலகமகா பாவம்.

உண்ணும் முன் உணருவோம்,

அந்த உணவு நம் இலைக்கு வந்த பாதையையும், அதன்பின்னுள்ள

உழவனின் உழைப்பையும்.!


*வாழ்க விவசாயம் வெல்க விவசாயி*



நன்றி வாழ்க நலமுடன் வளமுடன் 🐘

ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூரில் பாஜக படுதோல்வி..





ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூரில்

 பாஜக படுதோல்வி.... 

58 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக அடி...

நாக்பூர்:
மகாராஷ்டிர மாநில சட்டமேலவைத் தேர்தலில், ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாமல் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

இங்கு அவுரங்காபாத், புனே மற்றும் நாக்பூர்பட்டதாரி தொகுதிகளுக்கும், புனே, அமராவதி ஆசிரியர்கள் தொகுதிகளுக்குமாக மொத்தம் 5 சட்டமேலவை உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த டிசம்பர் 1 அன்று தேர்தல் நடைபெற்றது. 

இதில் தேசியவாத காங்கிரஸ் 2 இடங்கள், காங்கிரஸ் 2 இடங்கள், சுயேட்சை உறுப்பினர் ஒருவர் என வெற்றி பெற்றுள்ளனர்.

அவுரங்காபாத் மற்றும் புனே பட்டதாரி தொகுதிகளை தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், புனே ஆசிரியர் தொகுதி, நாக்பூர் பட்டதாரி தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 

இதில், நாக்பூர் பட்டதாரி தொகுதி வெற்றி, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்திருக்கும் நாக்பூரில், கடந்த 58 ஆண்டுகளில் ஒருமுறை கூட காங்கிரஸ் வெற்றிபெற்றதில்லை. 

பாஜக முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸின் சொந்த ஊரான இங்கு, தற்போதைய மத்திய அமைச்சர் நிதின்கட்காரியும், பலமுறை எம்எல்சி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

ஆனால், தற்போது பாஜக வேட்பாளர் சந்தீப்ஜோஷி (42 ஆயிரத்து791 வாக்குகள்), காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித்வன்ஜாரியிடம் (61 ஆயிரத்து 701 வாக்குகள்)சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தோற்றுப் போயிருக்கிறார். 

இது பாஜகவுக்குபெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது

.
இவ்வளவுக்கும் சந்தீப்ஜோஷி மாநகர மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்றாலும், ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூரில் கிடைத்த இந்த தோல்வி பாஜகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

மகா விகாஸ் அகாதி கூட்டணியின் வலிமையை உணரத் தவறிவிட்டோம் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் புலம்பியுள்ளார்

தமிழ் கதைகள் Tamil Kathaigal

 ”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் .

.

“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.

.

ஜட்ஜூக்கு சுருக்கென்றது.

.

பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ்.

.

ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,

.

“இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு”

.

பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.

.

ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்.

.

“பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.

.

அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்.

.

முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.

.

அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!

.

எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் வந்தார்.

.

“சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.

.

“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி.

.

“பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.

.

ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்.

.

*தக்காங்கு நாடித்* *தலைச்செல்லா* *வண்ணத்தால்*

*ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து*

.

குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு

 **


*நடிகை சாந்தினி அளித்த, பாலியல் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக மணிகண்டன் மீது சாந்தினி புகாரின் பேரில் 5பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவரை அழைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.*

TamilNadu COVID19, 30th MAY 21 Charts

 *COVID19, 30th MAY 21*


●  *Today in TN - 28,864*

●  *Total Cases in TN - 20,68,580*

●  *Today in Chennai -  2,689*

●  *Total Cases in Ch - 5,01,930*

●  *Today's Discharge - 32,982*

●  *Total Discharge in TN - 17,39,280*

●  *Today's Deaths - 493*

●  *Total Deaths in TN - 23,754*