ஏலக்காய் வாசனைக்காக பயன்படுத்தபடும் நிலையில், அதில் பல இயற்கை நன்மைகள் உள்ளன.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.
  பயணத்தின்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
 ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌ட் என எதையாவது வா‌யி‌ல் போ‌ட்டு அசை போடுவதா‌ல் எ‌ந்த‌ப் பலனு‌ம் இ‌ல்லை. அத‌ற்கு‌‌ப் ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடுவது நல்லது.
 ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும்.
ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. 

அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம். நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ஒரு அற்புத மரு‌ந்தாக இருக்கும்..

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்




நார்ச்சத்து மிகுந்த காய்களில் பீர்க்கங்காயும் ஓன்று, குறைந்த கலோரிகளை கொண்டது. ஆரோக்கியத்துக்கு அவசியமான அத்தனை உயிர்ச்சத்துகளையும் உள்ளடக்கிய காய் இது. வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன. செல்லுலோஸ் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய் என்பதால் மலச்சிக்கலுக்கும், மூல நோய்க்கும் மாமருந்தாக உதவுகிறது. பீர்க்கங்காயில் உள்ள பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் என்கிற இரண்டும் இயற்கையான இன்சுலினாக செயல்படுவதால், ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.பீட்டாகரோட்டின், பார்வைக் கோளாறுகள் வராமலும், பார்வைத் திறன் சிறக்கவும் உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிப்பதில் பீர்க்கங்காய் பங்கு மகத்தானது. கல்லீரல் ஆரோக்கியம் காப்பதிலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலைத் தேற்றுவதிலும் கூட பீர்க்கங்காய் பயன்படுகிறதாம். மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தபடுகிறது. தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகிறது. சரும நோய்கள் இருப்பவர்களுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, புண்கள் வராமலும் காக்கும். ஒட்டுமொத்த உடலையுமே குளிர்ச்சியாக வைக்க கூடிய ஆற்றல் உடையது.. 




பீர்க்கங்காயைக் காய வைத்து உள்ளே இருக்கும் நார்ப் பகுதியைப் பதப்படுத்தி, உடம்பு தேய்த்துக் குளிக்கும் நார் செய்யப்படுகிறது. பீர்க்கை நார் சருமத்தை சுத்தப்படுத்தவும், இறந்த செல்களை நீக்கி, ஆரோக்கியமாக வைக்கவும் கூடியது. பீர்க்கை இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் அவை சீக்கிரமே குணமாகும்..


WhatsApp won't work on these smartphones from 2020. Is yours on the list?



WhatsApp won't work on these smartphones from 2020. Is yours on the list?


  • Additionally, whatsapp will completely stop working on all Windows-supported phones from 31 December, 2019
  • The popular messaging app will also not work on a number of Android and iOS phones from 1 February, 2020
NEW DELHI : Just a few weeks are left before WhatsApp will stop working on a number of smartphones. As updated on the FAQ section of the instant messaging platform, there are several Android and iOS phones that may not be able to run the app as the company will withdraw support for some older mobile platforms from 1 February, 2020.
According to the information on WhatsApp FAQ section, Android phones running on Android 2.3.7 operating system and iPhones running on iOS 8 will not support WhatsApp from next year.

Moreover, the FAQ also emphasised that these older version of Android and iOS operating systems "can no longer create new accounts, nor re-verify existing accounts after February 1, 2020.

In addition to this, WhatsApp is withdrawing support for all Windows phones from December 31, 2019 — the same month that Microsoft ends support of its Windows 10 Mobile OS. The company also added that the app "might not be available in the Microsoft Store after July 1, 2019."
But, if you have a Windows smartphone, and don’t want to lose all your chats and information on 31 December, 2019 there is an option to save your chats


Tap ‘Export Chat’. You’ll then be given the option to download the chat with or without media. Choose your option and export all your chats.
Furthermore, the Facebook-owned instant messaging platform will keep the app running for select phones with KaiOS 2.5.1+ OS, including JioPhone and JioPhone 2.
WhatsApp also highlighted that the decision to end WhatsApp support for these Android phones and iPhones will not affect a lot of users.

முஸ்லிம் பெண்ணின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்ட இந்து சகோதரர்!



 மணவிழாவில் நல்லிணக்கம்!

தஞ்சையில் இன்று மதிமுகவின் வளைகுடா அமைப்பாளர் பஷீர், மனிதநேய ஜனநாயக கட்சியின் பஹ்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் ஆகியோரின் சகோதரி நசீபா முனவராவுக்கும், மணமகன் சம்சுதீன் அவர்களுக்கும் நிக்காஹ் எனும் வாழ்க்கை ஒப்பந்த நிதழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின்  பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA  தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார்.



இதில் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திமுக இலக்கிய அணி செயலர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர்  நிஜாமுதீன், தமிழக மக்கள் ஐனநாயக கட்சி தலைவர் KM ஷெரீப் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பிறகு அமைச்சர் காமராஜ் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

இத்திருமணத்தில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

மணமகள் குடும்பத்தினரான வல்லம் பஷீரும், வல்லம் ரியாசும்  தந்தையை இழந்தவர்கள்.

அவர்களது  குடும்பத்தை , தந்தை ஷேக் தாவூதின்  நண்பர் வடுவூர் ரவி அவர்கள், தன் குடும்பத்தோடு குடும்பமாக அன்பு காட்டி  அரவணைத்து நட்புக்கு மரியாதை செய்து வருகிறார்.

தன் நண்பரின் மகன் வல்லம் பஷீரின் திருமணம் போலவே, அவரது தங்கையின்  திருமணத்தையும் முன்னின்று  நடத்தி கொடுத்துள்ளார்.

தங்கள் தந்தையின் நண்பரை மதிக்கும் வகையில் ,சகோதரர்கள் வல்லம் பஷீரும், ரியாசும் , இஸ்லாமிய வழக்கப்படி,திருமண ஒப்பந்தத்தில் மணமகளின் இரு சாட்சிகளில் ஒருவராக ரவி அவர்களை கையெழுத்திட முடிவு செய்தனர்.

அவ்வாறே  நிக்காஹ் படிவத்தில் கையழுத்திட செய்து அவரை கெளரவப்படுத்தி உள்ளனர்.

வல்லம்  ஜமாத்தும் இந்த நல்லுறவை  பாராட்டும் வகையில், அதை அனுமதித்து சிறப்பித்துள்ளது.

இதை திருமண நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

இது தான் நமது தமிழ் மண்ணின் மதச்சார்பின்மை என தமிமுன் அன்சாரி MLA கூற, இந்த உறவுகளை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்று அதை வழிமொழிந்தார்  தனியரசு MLA .

மணமக்களை நிறைவாக வாழ்த்திய வைகோ அவர்கள்  இந்த நட்பும், உறவும்தான் இத்திருமணம் மூலம் இந்தியாவுக்கு நாம் சொல்லும் செய்தி என்று பூரித்தார்.

Breaking News Nirbaya

 நிர்பயா பாலியல் குற்ற வழக்கின் குற்றவாளிகள் கருணை மனு நிராகரித்தார் குடியரசு தலைவர்,16ம் தேதி அதிகாலை தூக்கிலப்படுகின்றனர்!

JusticeForSugaliPreethi Actor Pavankalyaan

15 வயது பள்ளி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை. ஆனால் தற்கொலை என்று கேசை கிடப்பில் போட்டுவிட்டார்கள், உடலில் விந்தணுக்கள் உள்பட என பல வலுவான ஆதாரங்கள் இருந்தும் மேலிட மிரட்டல் மற்றும் செல்வாக்கால் என்னால் செய்யமுடியவில்லை'

இப்படிச்சொல்லி மாணவியின் மாற்றுத்திறனாளியான தாய், தன் மகள் சாவுக்கு நீதிவேண்டும் என்று மூன்று வருடமாய் போராடிவருவதாக கண்ணீர் வடிக்கிறார்.

நடிகர் கம் அரசியல் தலைவர் பவன்கல்யாண் இந்த விவகாரத்தை கையில் எடுக்க ஆந்திராவாசிகள் கோபத்தோடு #JusticeForSugaliPreethi என்று டுவிட்டரில் டிரெண்டிங்..இப்போது நெம்பர் ஒன்